உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

விழுப்புரம் : கண்டமங்கலம் அடுத்த சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள கருணைக்கரங்கள் குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு நடவடிக்கை, சுகாதாரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் ஆகியவற்றை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். அப்போது, குழந்தைகள் இல்லம் நடத்த தேவையான அனைத்து சான்றுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என கோப்புகளை பார்வையிட்டார்.மேலும், குழந்தைகளின் கல்வி, உடல் நிலை மற்றும் இதர வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து கேட்டறிந்தார். தொடர்ந்து இல்லத்தில் உள்ள மாணவிகள் அறைகள், படுக்கையறை வசதி, சமையலறை வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.பின், கலெக்டர் கூறுகையில், 'குழந்தைகளின் திறனை மேம்படுத்த அவர்களுக்கு அளிக்கும் இதர பயிற்சிகள் குறித்தும் கூடுதலாக மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் கல்வி கற்றுத்தர அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.இறுதியாக கலெக்டர் மாணவிகளோடு புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, குழந்தைகள் பாதுகாப்பு இல்ல காப்பாளர் எலிசபெத் உட்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை