| ADDED : டிச 04, 2025 05:52 AM
விழுப்புரம் : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் பாடப்பிரிவு பயிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் பிரபல்ராஜ், 22; இவர் நேற்று மதியம் தனது தோழிகளுடன் பொம்மையார்பாளையம் கடற்கரைக்கு சென்று, அங்கு கடலில் உற்சாகமாக குளித்துள்ளார். அப்போது எழுந்த ராட்சத அலையில் மாணவர் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதனைக் கண்ட நண்பர்கள் கூச்சலிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த, கடலுார் புதுக்குப்பம் கடலோர காவல் படை போலீஸ்காரர் அன்பரசன், அருகில் இருந்த பொம்மையார்பாளையம் மீனவர்கள் தமிழ், கமலக்கண்ணன் ஆகியோர் உதவியுடன் பிரபல்ராஜை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.