மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கல்
08-Nov-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் கோமதி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனர் கலிவு 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் அடுத்த பில்லுாரில் மறைந்த கலிவு நினைவகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோமதி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மேலாண் இயக்குநர் காசிலிங்கம் தலைமை தாங்கினார். கோமதி கலிவு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், ஏழைகளுக்கு வேட்டி, சேலை மற்றும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகையில் அன்னதானம் வழங்கினர். சியாமளா, ரேஷ்மி, கிஷன் மற்றும் பில்லுார் கிராம மக்கள் பங்கேற்றனர்.
08-Nov-2025