உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசியலமைப்பு தினம் மாணவர்கள் உறுதிமொழி

 அரசியலமைப்பு தினம் மாணவர்கள் உறுதிமொழி

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசமைப்பு நாளையொட்டி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை ஏற்றதன் நினைவாக, ஆண்டு தோறும் நவ.26ம் தேதி, இந்திய அரசியலமைப்பு தினமாக நாடு முழுதும் கடைபிடித்து வருகிறோம். இதன்படி, நேற்று தமிழகம் முழுதும் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் சார்பில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் சகாதேவன் தலைமையில், 300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு அரசியலமைப்பு தினத்தையொட்டி, அதன் முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றனர். வழக்கறிஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி