உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழங்குடியின ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை

பழங்குடியின ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை

விழுப்புரம் : விழுப்புரத்தில் அனைத்து பழங்குடியினர் ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டத்தில், பழங்குடியினர் ஊராட்சி தலைவர்களிடம், ஊராட்சியின் அடிப்படை தேவைகள், நிர்வாகத்தில் ஒத்துழைப்பு குறித்து கேட்டறியப்பட்டது.ஊராட்சி தலைவர்கள், தங்களின் ஊராட்சிக்கு தேவையான சிமென்ட் சாலை, ஜல்லி சாலை, தெருவிளக்குகள், குடிநீர், ஜன்மன் திட்டத்தின் கீழ் வீடுகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், வீட்டு மனைப்பட்டா, ஜாதி சான்றிதழ் குறித்தும் கேட்டனர்.கூட்டத்தில், பங்கேற்ற பழங்குடியின ஊராட்சி தலைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். எஸ்.பி., தீபக் சிவாச், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், பழங்குடியினர் ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி