உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

விழுப்புரம் : மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், கோரிக்கைகள் வலியுறுத்திய போராட்டம் நடத்துவது குறித்து, மண்டல இணை பதிவாளரிடம் கடிதம் அளித்தனர்.விழுப்புரம் மாவட்ட தலைவர் ஏழுமலை, செயலாளர் அனந்தசயனன் உள்ளிட்டோர், விழுப்புரம் கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளரை சந்தித்து, மாநில சங்கம் அறிவித்துள்ள போராட்டத்தில் பங்கேற்பது குறித்த கடிதத்தை வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது; தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில குழு அறிவித்தபடி, கூட்டுறவு வங்கிகளின் கீழ் இயங்கும் பொது விநியோகத்திட்ட ரேஷன் கடைகளில், விற்பனை முனைய கருவியுடன், மின்னணு தராசு இணைப்பு மேற்கொண்டு பணிபுரிதலில் ஏற்படும் பல்வேறு இடர்பாடுகளை விளக்கி, வரும் 27ம் தேதி அனைத்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள், கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூலை 14ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை