உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  விழுப்புரத்தில் இன்று கூட்டுறவு வார விழா

 விழுப்புரத்தில் இன்று கூட்டுறவு வார விழா

விழுப்புரம்: விழுப்புரத்தில், அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, இன்று நடைபெற உள்ளது. விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் இன்று 19ம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் சிவபழனி வரவேற்கிறார். மண்டல இணைப் பதிவாளர் விஜயசக்தி, திட்ட விளக்கவுரை ஆற்றுகிறார். நிகழ்ச்சிக்கு, எம்.பி.,க்கள் ரவிக்குமார், தரணிவேந்தன், சண்முகம், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கூடுதல் கலெக்டர் பத்மஜா முன்னிலை வகிக்கின்றனர். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், சிவக்குமார், சக்ரபாணி, அரஜூனன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். துணைப் பதிவாளர் சரண்யா நன்றி கூறு கிறார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் நடக்கிறது. மாவட்ட அளவிலான சிறந்த சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி