உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்கள் நலப் பணியாளர்களுக்குப் பயிற்சி

மக்கள் நலப் பணியாளர்களுக்குப் பயிற்சி

புவனகிரி:மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் உள்ள மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாநில பிற்படுத்தப்பட்டோர் மானிய நிதித் திட்டத்தின் கீழ் அடிப்படை செயலாக்கப் பயிற்சி துவங்கியது.வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மறைமலை நகர் மண்டல ஊரக வளர்ச்சி நிறுவன பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராமசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேல்புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சியின் மக்கள் நலப் பணியாளர்கள் பங்கேற்றனர். கிரேசி ஹெலன் பயிற்சி அளித்தார். தொடர்ந்து 4 நாட்கள் பயிற்சி நடக்கிறது.வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், பயிற்சியாளர்கள் கவிதா, லதா, கென்னடி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்