உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிதம்பரம் குறுவட்ட தடகளப் போட்டிஆர்.சி.டி., பள்ளி மாணவர் சாம்பியன்

சிதம்பரம் குறுவட்ட தடகளப் போட்டிஆர்.சி.டி., பள்ளி மாணவர் சாம்பியன்

சிதம்பரம்:சிதம்பரம் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர் சாதிக் அலி சாம்பியன் பட்டம் வென்றார்.சிதம்பரம் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் ராமசாமி செட்டியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. குறுவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ராமசாமி செட்டியார் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் சாதிக் அலி சாம்பியன் பட்டம் வென்றார்.பச்சையப்பன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பரணி போட்டிகளை நடத்தினார். உடற்கல்வி ஆசிரியர் இளங்கோவன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை