இடிந்து விழும் நிலையில் கல்வெர்ட் அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
திண்டிவனம் : திண்டிவனம் - செஞ்சி ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த கல்வெர்ட் சேதமடைந்து, இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.திண்டிவனம் - செஞ்சி ரோடு, பஸ் நிறுத்தம் எதிரே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிவுநீர் செல்லும் வாய்க்கால் கல்வெர்ட் உள்ளது. இதன் பக்கவாட்டு சுவர்கள் இடிந்துள்ளது. மேலும், அடிப்பகுதியில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகிறது.இந்த கல்வெர்ட் வழியாக செஞ்சி மார்க்கத்திலிருந்து திண்டிவனம் நகருக்குள் வரும் அனைத்து பஸ்கள், கன ரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் செல்கின்றன.கல்வெர்ட்டின் உறுதித் தன்மை நாளுக்கு நாள் மோசமாகி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த கல்வெர்ட் இடிந்து விழுந்தால், திண்டிவனம் நகருக்குள் வரும் அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்படும்,பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.