மகள் மாயம்; தாய் புகார்
மரக்காணம் : மரக்காணம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் பச்சையம்மாள், 19; இவர் அதே ஊரில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த அவரது தாய் அமுல் அளித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.