தந்தை மாயம் மகள் புகார்
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே தந்தையைக் காணவில்லை என மகள், போலீசில் புகார் அளித்துள்ளார்.மதுரை, எம்.எம்.பவளம், சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி 70; இவர் கண்டமங்கலம் அடுத்த மிட்டாமண்டகப்பட்டு சென்ட்ரல் பாங்க் கிளை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்று, அதே பகுதியில் வசித்து வருகிறார்.கடந்த 8ம் தேதி கொங்கம்பட்டு அடுத்த ராமரெட்டிக்குளம் பகுதிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மகள் ரீனா கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.