உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் பயிர் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை

பெஞ்சல் புயல் பாதித்த மாவட்டங்களில் பயிர் கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை

விழுப்புரம்: பெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கத்தினர், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத் தில் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல்காரண மாக பாதிக்கப்பட்ட விழுப் புரம், திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ண கிரி மாவட்டங்களில் அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.இழப்பீட்டுக்கு பதிலாக, விவசாயிகளுக்கு, தரமற்ற இடுபொருட்கள் மற்றும் உரங்கள், மருந்துகள் வழங்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, தமிழக அரசு அதனை ரத்து செய்து, உரிய இழப்பீட்டு தொகையினை வழங்க வேண்டும்.பயிர் கடன் தள்ளுபடி செய்த அத்தனை விவசாயிகளுக்கும், உடனடியாக மறு பயிர் கடன் வழங்கவேண்டும். மேலும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்தினை உடனடியாக மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும்.சாத்தனூர் அணையிலிருந்து அதிகபடியான தண்ணீர் திறந்ததால், நந்தன் கால்வாய் மற்றும் பல ஏரிகளின் கரைகள் உடைந்து சேதமடைந்துள்ளது. அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவு திறக்க வேண்டும் என்று, அதில் வலியுறுத்தியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை