உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேளாண் விதைப்பண்ணையில் துணை இயக்குனர் ஆய்வு

வேளாண் விதைப்பண்ணையில் துணை இயக்குனர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் வேளாண் விதைப்பண்ணையில் துணை இயக்குனர் ஆய்வு நடத்தினார்.திருவெண்ணெய்நல்லுார் பகுதிகளில் நெல், வேர்க்கடலை, உளுந்து போன்ற பயிர்கள் விதைப்பண்ணையில் பதிவு செய்து சாகுபடி செய்து வருகின்றனர். விதைப் பண்ணை அமைத்த வயல்களை துணை வேளாண்மை இயக்குனர் பெரியசாமி பார்வையிட்டு அதன் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும், வேர்க்கடலையில் 45வது நாளில் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். உளுந்து பயிரில் 2 சதவீதம் டி.ஏ.பி., கரைசல் தெளிக்க வேண்டும். இதனால் மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகளிடம் விளக்கினார்.மேலும், திருவெண்ணைநல்லுார் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான் மானிய விலையில் வழங்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் பால சரவணன், உதவி விதை அலுவலர் பழனிமுத்து, உதவி வேளாண்மை அலுவலர், பாக்யராஜ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி