உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோலியனுார் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணி: கலெக்டர் ஆய்வு

கோலியனுார் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணி: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோலியனுார் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் அடுத்த திருப்பாச்சானுார் ஊராட்சியில், ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருந்து வந்த நிலம் இல்லாதவர்களுக்கு, நிலம் வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில், 15.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான இடத்தினை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.தொடர்ந்து, கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர், மருந்தகம், ஸ்கேன் அறை, புறநோயாளிகளின் வருகைப் பதிவேடு, குடும்ப நல அறுவை சிகிச்சைப் பிரிவு, பல் மருத்துவ பிரிவுகளை ஆய்வு மேற்கொண்டார்.மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பயனடையும் பயனாளிகள் விபரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவ கழிவுகளை தனியாக பிரித்து முறையாக வெளியேற்றிட அறிவுறுத்தினார்.தொடர்ந்து மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு, கணினியின் வாயிலாக வருகை சதவீதம் குறித்தும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, கோலியனுார் பி.டி.ஓ.,க்கள் ராஜவேல், முருகன், வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை