உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சர்க்கரை நோய் சிறப்பு முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு

சர்க்கரை நோய் சிறப்பு முகாம் அமைச்சர் துவக்கி வைப்பு

செஞ்சி : செஞ்சி நாட்டேரி சுவேதா பத்மாசினி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் சர்க்கரை நோய் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.ஓம் பெஸ்ட் அமைப்பு சார்பில் நடந்த முகாமிற்கு, அன்னை ஓம் பவதாரிணி தலைமை தாங்கினார். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வந்தியத்தேவன் வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார். சென்னை டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மருத்துமனை சர்க்கரை நோய் சிறப்பு டாக்டர்கள் நிதின், அனுஷா மற்றும் மருத்துவ தொழில் நுட்ப பணியாளர்கள் நோயாளிகளுக்கு பரிசோதனைகளை நடத்தி ஆலோசனை வழங்கினர்.செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேராசிரியர் மகேஸ்வரி, ஸ்வேதா பத்மாசினி பள்ளி தாளாளர் உமா கார்த்திகேயன், புதுச்சேரி தொழிலதிபர் குமுதினி பிரேம்குமார் பங்கேற்றனர். நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை