தினமலர் - பட்டம் வினாடி வினா
விழுப்புரம்: விழுப்புரம் பீம நாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தினமலர் பட்டம் இதழ் வினாடி வினா போட்டி நடந்தது. புதுச்சேரி தினமலர் பட்டம் இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி நடந்தது. இந்தபோட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 மாணவர்களை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, 2 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ரகு தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர்கள் முருகன், சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். இதில், 7 ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திகேயன், முகிலன் முதலிடமும், 7 ம் வகுப்பு மாணவி குணவதி, 8 ம் வகுப்பு வகுப்பு மாணவி ஜீவன்யா இரண்டாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இப்பள்ளிக்கு விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பட்டம் இதழ் வழங்கப்பட்டு வருகிறது.