விழுப்புரம்: புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் பதில் சொல்; பரிசு வெல் வினாடி வினா போட்டி விழுப்புரம் பகுதி பள்ளிகளில் நடந்தது. கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பங்கேற்றனர். அதில், 16 மாணவியர்கள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளி உதவி தலைமை ஆசிரியை யமுனா பாய் தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியை இந்திரா முன்னிலை வகித்தார். இதில், எட்டாம் வகுப்பு மாணவர்கள் விஷ்வந்த், பிரசன்னா முதலிடமும், மாணவியர்கள் கீர்த்தனா, தமீனா இரண்டாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு விழுப்புரம் சரஸ்வதி கல்விக்குழும தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்து சரவணன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பள்ளியில் நடந்த போட்டிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில், பிளஸ் 1 மாணவர்கள் மிதுன்ராஜ், சுதர்ஷன் முதலிடமும், பிளஸ் 1 மாணவர் வேலன், ஒன்பதாம் வகுப்பு மாணவர் அதியசாமன் இரண்டாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி பள்ளியில் நடந்த போட்டிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியர்கள் பாலசுந்தரி, சித்ரா, பயிற்சி ஆசிரியர் சீத்தாலட்சுமி முன்னிலை வகித்தனர். இதில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கிேஷார், ஆதித்திய பிரகஜித் முதலிடமும், ஒன்பதாம் வகுப்பு மாணவி மோனிகா, ஏழாம் வகுப்பு மாணவி கோபிகா இரண்டாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.