உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சலவாதி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

 சலவாதி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

திண்டிவனம்: 'தினமலர்-பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், பதில் சொல்,பரிசு வெல் வினாடி வினா போட்டி, திண்டினம் அருகே உள்ள சலவாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளியில் நடந்த முதற்கட்ட போட்டியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 சுற்று போட்டி நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியை தரணி தலைமை தாங்கினார். போட்டியில் 8ம் வகுப்பு மாணவி கீர்த்தனா, தன்சிகாஸ்ரீ ஆகியோர் முதலிடத்தையும், 8ம் வகுப்பு மாணவிகள் ஓவியா, பத்மஸ்ரீ ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, மரக்காணம் ஒன்றிய துணை சேர்மன் பழனி கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், மரக்காணம் மேற்கு ஒன்றிய தி.மு.க.,விளையாட்டு அணி அமைப்பாளர் ராஜா, பஞ்சாயத்து துணை தலைவர் சரண்யா மற்றும் பள்ளி ஆசிரியைகள் கவுசல்யா, வாணிஸ்ரீ, சவுந்திரபாண்டியன், வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ