உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஹோலி ஏஞ்சல் பள்ளியில் தினமலர்-பட்டம் வினாடி--வினா போட்டி

ஹோலி ஏஞ்சல் பள்ளியில் தினமலர்-பட்டம் வினாடி--வினா போட்டி

மயிலம், ; ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் குலேஷன் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' வினாடி வினா போட்டி நடந்தது. தினமலர் நாளிதழ் பட்டம் இதழ் எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது.பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொது அறிவை வளர்க்கும் பொருட்டு வினாடி-வினா போட்டியை 'தினமலர் - பட்டம்' இதழ் நடத்தி வருகிறது.இதன்படி ஹோலி ஏஞ்சல் பள்ளியில் நடந்த போட்டியில் 250 மாணவ, மாணவிகள் தகுதித் தேர்வு எழுதினர். அதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு 8 அணிகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஹோலி ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார்.பள்ளி முதுநிலை முதல்வர் அகிலா பழனியப்பன் முன்னிலை வகித்தார். போட்டியில் பங்கேற்ற 8 அணியை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி