உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு

திண்டிவனம் அரிமா நிர்வாகிகள் பதவியேற்பு

திண்டிவனம் : திண்டிவனம் அரிமா சங்கங்களின் நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. சங்கத் தலைவர்கள் முரளிதரன், மணி அய்யர் தலைமை தாங்கினர். மண்டல தலைவர்கள் சண்முகம், தங்கராஜ் முன்னிலை வகித்தனர். திண்டிவனம் அரிமா சங்கத் தலைவர் வக்கீல் சத்தியவேந்தன், செயலாளர் ஜாகீர்உசேன், பொருளாளர் வக்கீல் பாபு, மணிலா நகர் அரிமா சங்கத் தலைவர் பிரான்சிஸ், செயலாளர் சாம்ராஜ் சம்பத்குமார், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோருக்கு துணை ஆளுநர் ஸ்வேதகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் ஆளுநர் செல்வகாந்தி சேவை திட்டங்களை துவக்கி வைத்தார். வக்கீல்கள் சங்கரன், கணேஷ் காந்தி, மாவட்ட தலைவர்கள் கார்த்திக், ராஜேந்திரன், டாக்டர் குப்புசாமி, வட்டார தலைவர்கள் வேல்முருகன், சிவக்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி