உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குறைதீர்ப்பு கூட்டம்

குறைதீர்ப்பு கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறைதீர்ப்புக் கூட்டத்தில் 761 மனுக்கள் பெறப்பட்டன. விழுப்புரத்தில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்திற்கு கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம் முன்னிலை வகித்தார். இதில் முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, ரேஷன் கார்டு, கல்விக் கடன், தொகுப்பு வீடு மற்றும் பட்டா மாற்றம் கோரி 761 பேர் மனு கொடுத்தனர். இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் சமூக பாதுகாப்பு சப்-கலெக்டர் நாகராஜ், பிற்பட்டோர் நல அலுவலர் வாசுதேவன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராசாத்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை