உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காமராஜர் பிறந்த நாள் விழா: கல்வி உபகரணங்கள் வழங்கல்

காமராஜர் பிறந்த நாள் விழா: கல்வி உபகரணங்கள் வழங்கல்

விழுப்புரம் : விழுப்புரத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது. விழுப்புரத்தில் உள்ள மாவட்ட வர்த்தக காங்., அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது படத்திற்கு மாநில செயலா ளர் சீனுவாசகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வேலா காதுகேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கினர். நகர நிர்வாகிகள் தாமோதரன், பிரேம்ராஜ், முகமது ஜபருல்லா மற்றும் பாலு, ஏழுமலை, பால்ராஜ், நாராயணசாமி, சுந்தர் கலந்து கொண்டனர். காமராஜர் மன்றம்: விழுப்புரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு நகர காங்., சார்பில் மாலை அணிவித்தனர். தொடர்ந்து காமராஜர் வீதியில் நடந்த விழாவில் நடராஜா நடுநிலைப் பள்ளி, கமலா நகர் நிதி உதவிப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில்களை வழங்கினர். இவற்றை நகர காங்., தலைவர் குலாம்மொய்தீன் வழங்கினார். முன்னதாக நகர பொரு ளாளர் ரகுநாதன் வரவேற்றார். வக்கீல் தயானந்தம், முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், சிவாஜி மன்றத் தலைவர் ஆறுமுகம், இளைஞர் காங்., ரமேஷ், சிறுபான்மை பிரிவு காஜா கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற நிர்வாகிகள் பஷீர்அகமது, கஜேந்திரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை