உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மண்டபத்தில் மாப்பிள்ளையின் பைக் அபேஸ்

மண்டபத்தில் மாப்பிள்ளையின் பைக் அபேஸ்

விழுப்புரம் : திருமண மண்டபத்தில் மாப்பிள்ளைக்கு சீர் வரிசையாக வாங்கி வைத்திருந்த மோட்டார் øகிள் திருடு போனது. கண்டமங்கலம் அடுத்த புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது மகளின் திருமணத்தை கடந்த 3ம் தேதி புதுக்குப்பம் மீனாட்சி திருமண மண்டபத்தில் நடத்தினார். அப்போது தனது மாப்பிள்ளைக்காக திருமணத்திற்கு முதல் நாள் மாலை சீர் வரிசையாக புதிய மோட்டார் சைக்கிளை மண்டபத்தின் எதிரே நிறுத்தி வைத்திருந்தார். அன்று நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர்.இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்