உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொங்கராயனூர்-அருளவாடி இடையே விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும் எம்.எல்.ஏ., தகவல்

கொங்கராயனூர்-அருளவாடி இடையே விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும் எம்.எல்.ஏ., தகவல்

திருவெண்ணெய்நல்லூர் : கொங்கராயனூர்-அருளவாடி இடையே ஆற்றில் மேம்பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்வேன் என வெங்கடேசன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பையூர் மேம்பாலப்பணிகளை ஆய்வு செய்த திருக்கோவிலூர் எம்.எல்.ஏ., வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:பையூர் மேம்பாலப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மேலும் பணிகளை துரிதப்படுத்தி வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளேன். கொங்கராயனூர்-அருளவாடி இடையே பெண்ணையாற்றில் தரைப்பாலம் உள்ளதால் மழைக்காலங்களில் மக்கள் அவதியடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சட்டசபையில் பேசி உயர்மட்டப்பாலம் கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்வேன். கடந்த ஆட்சியின் போது விடப்பட்ட பணிகள் காலதாமதாக துவக்கப்பட்டன. சில பணிகள் துவங்காமல் இருந்தன. இவற்றை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி மழைக்காலங்களுக்கு முன்னதாக முடிக்க வேண்டுமென கூறியுள்ளேன். அணைக்கட்டு பகுதியில் படுமோசமான தார்சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதனை தரமானமுறையில் அமைத்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருக்கோவிலூரில் கண்டிப்பாக பஸ் நிலையத்தை கொண்டு வருவேன். திருக்கோவிலூர் காந்தி திருமண மண்டபம் உள்ள இடத்தில் அவரது பெயரிலேயே வணிக வளாகம் அமைக்கப்படும். இதில் காய்கறி, பூக்கடைகள் மற்றும் நடைபாதைக்கடைகள் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வெங்கடேசன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி