உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிப்பு குடிநீர் திட்டம் துவக்கம்

திண்டிவனம் பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிப்பு குடிநீர் திட்டம் துவக்கம்

திண்டிவனம் : திண்டிவனம் வாசவி கிளப் சார்பில் காலை முதல் மாலை வரை என்ற முப்பெரும் விழா நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் பூந்தோட்டத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. தேசிய மேல் நிலை பள்ளியில் ரத்த தான முகாம் நடந்தது. அரசு மருத்துவமனை டாக்டர் கள் மணிமேகலை,செல்வகுமாரி குழுவினர் 27 பேரிடமிருந்து ரத்தம் பெற்றனர். பிற்பகல் குஷால்சந்த் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுத்திகரித்த குடிநீர் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது.வாசவி கிளப் இண்டர் நேஷனல் பிரமுகர்கள் ராமசெட்டி, துணை ஆளுனர் நாராயண குப்தா, வட்டார தலைவர் ரங்கநாதன், மாவட்ட தலைவர் ராம் குமார், பள்ளி நிர்வாகி ஜின்ராஜ், தலைமை ஆசிரியர் அப்பாண்டைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம் தேசிய மேல் நிலைப் பள்ளியில் வாசவி கிளப் உறுப்பினர்கள் கூட்டம் மாலையில் நடந்தது. ராம் டெக்ஸ் தியாகராஜன், பி.ஆர்.பார்த்த சாரதி, சங்கத் தலைவர் சீனுவாசன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சதீஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை