உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோலியனூரில் பா.ம.க., ஆண்டு விழா

கோலியனூரில் பா.ம.க., ஆண்டு விழா

விழுப்புரம் : கோலியனூர் ஒன்றியப் பகுதிகளில் பா.ம.க., கொடியேற்று விழா நடந்தது.கோலியனூர் கிழக்கு பா.ம.க., சார்பில் கட்சியின் 23ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமலிங்கம், பூராசாமி, ராஜேந்திரன், எழிற்கோ, வைத்தியலிங்கம், தமிழ், பெருமாள் முன்னிலை வகித்தனர். வன்னிய சங்க ஒன்றிய செயலாளர் ஞானவேல் வரவேற்றார். மாநில துணை பொதுசெயலாளர் செந்தமிழ் செல்வன் கலந்து கொண்டு பாணாம்பட்டு, ஆனாங்கூர், அரசமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் கொடியேற்றினார். மாநில துணைத் தலைவர் தங்கஜோதி, வன்னியர் சங்க துணை தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் பழனிவேல், தலைவர் துரைமுருகன், இளைஞரணி சிவக்குமார், வன்னியர் சங்க நிர்வாகிகள் புண்ணியக்கோடி, தன்ராஜ் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர் உஷா மன்னர்மன்னன் நன்றி கூறினார்.விழுப்புரம் வழியாக இரட்டை ரயில் பாதைபணிகளை விரைந்து முடித்திட வேண்டும் : ஆனந்தன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ