உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

செஞ்சி : அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா கெடார் அடுத்த மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 57. இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பஸ் டிரைவராக வேலை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் இருந்து நல்லாபாளையம் செல்லும் டவுன் பஸ்சை ராஜேந்திரன் ஓட்டி சென்றார். அப்போது அரியலூர் திருக்கை கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ், 21 மற்றும் மணிகண்டன் இருவரும் ராஜேந்திரனிடம் தகராறு செய்தனர். இந்த முன் விரோதம் காரணமாக நேற்று முன்தினம் காலை அரசு டவுன் பஸ்சை ஓட்டி வந்த ராஜேந் திரனை அரியலூர் பஸ் நிறுத்தத்தில் இருவரும் வழி மறித்து தாக்கினர். கெடார் போலீசார் வழக்கு பதிந்து சத்தியராஜை கைது செய்தனர். மணிகண் டனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்