| ADDED : செப் 30, 2011 01:43 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கட்சி வேட்பாளர்கள் நேற்று மனு
தாக்கல் செய்தனர்.கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க.,
வேட்பாளர் சுப்பராயலு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல். ஏ.,க்கள்
உதயசூரியன், மூக்கப்பன், நகர செய லாளர் கென்னடி, ஒன்றிய சேர்மன்
வெங்கடாசலம் உடனிருந்தனர். காங்., சார்பில் நகர தலைவர் தனபால் மனு தாக்கல்
செய்தார். மாவட்ட கவுன்சிலர் இளையராஜா, ரமேஷ் உடனிருந்தனர்.தே.மு.தி.க., வேட்பா ளர் சுப்ரமணியன் மனு தாக்கல் செய்தார். முன்னாள்
மாவட்ட செயலாளர் செழியன், நகர செயலா ளர் குமார், ஒன்றிய செயலாளர் நல்லதம்பி
உடனிருந்தனர். கட்சி நிர்வாகிகளுடன் வந்து ஐ. ஜே.கே., வேட்பாளர் ஜெயராமன்
மனு தாக்கல் செய்தார்.