உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு கலை கல்லுாரியில் நேரடி விற்பனை கண்காட்சி

அரசு கலை கல்லுாரியில் நேரடி விற்பனை கண்காட்சி

வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனை கண்காட்சி நடந்தது. மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் 'கல்லுாரி சந்தை' என்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனை கண்காட்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்கள் வானுார் ஒன்றிய சேர்மன் உஷா முரளி, விழுப்புரம் ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் செந்தில் வடிவு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர். கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த கைவினை பொருட்கள், ஆயத்த ஆடைகள், பேன்சி உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், பி.டி.ஓ.,க்கள் சுபாஷ் சந்திரேபோஸ், மணிவண்ணன், வட்டார இயக்க மேலாளர் ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் விற்பனை மேலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். அரங்குகள் அமைக்கும் பணியை கல்லுாரியில் செயல்படும் நுண்கலைப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரி, பேராசிரியர் பிரதாப் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை