உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சஸ்பெண்ட்

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சஸ்பெண்ட்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 'சஸ்பெண்ட்' செய்து இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல். இவர் மீது கடந்த சில மாதங்களாகவே மாற்றுத்திறனாளிகள் நலசங்கம் சார்பில் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உத்தரவுகளை சரியாக செயல்படுத்தவில்லை. நலத்திட்டங்களை வழங்குவதில்லை. சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கலெக்டர் மற்றும் துறை இயக்குனரிடம் அளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்த மாற்றுத் திறனாளிகள் துறை இயக்குனர் லட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலை, சஸ்பெண்ட் செய்து, உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை முழுமையாக பின்பற்றப்படவில்லை. அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்களுக்கான பணிகளை தற்போது வரை விழுப்புரம் மாவட்டத்தில் துவங்கவில்லை.மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை முறையாக செயல்படுத்தாமல், தேக்க நிலையில் வைத்து, அலுவலக இறையாண்மைக்கு பாதகம் ஏற்படும் வகையிலும், துறையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் வகையில் ஒழுங்கீனமாக செயல்பட்டுள்ளார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973விதி 20ஐ மீறி செயல்பட்டுள்ளார். இதனால், குடிமைப் பணிகள் விதி 17ன் கீழ் பொதுநலன் கருதி, சஸ்பெண்ட் செய்தும், தலைமையிடத்தை விட்டு அனுமதிபெறாமல் செல்லக்கூடாது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை