உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு டாக்டரிடம் தகராறு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்

அரசு டாக்டரிடம் தகராறு; தி.மு.க., பிரமுகர் மீது புகார்

விழுப்புரம்; வானுார் அரசு மருத்துவமனையில் தகராறு செய்ததாக அரசு டாக்டர் ஒருவர், தி.மு.க., பிரமுகர் மீது புகாரளித்துள்ளார்.திண்டிவனம் வகாப் நகரை சேர்ந்தவர் அரசு மருத்துவர் சுரேஷ்குமார்,37; நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் வானுார் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது, அங்கு வந்த வானுார் அடுத்த எறையூரைச் சேர்ந்த தி.மு.க., கிளை செயலர் ரவிச்சந்திரன்,40; ஒருவரின் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும், அதற்கு டாக்டர் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு டாக்டர் சுரேஷ்குமார் மறுத்ததால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர், தன்னை ஆபாசமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, டாக்டர் சுரேஷ்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார். இதே போல் தி.மு.க., பிரமுகர் ரவிச்சந்திரனும், டாக்டர் மீது போலீசில் புகாரளித்துள்ளார். இது குறித்து, வானுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ