மேலும் செய்திகள்
தீ தொண்டு நாள் விழிப்புணர்வு
17-Apr-2025
திருவெண்ணெய்நல்லூர்,; திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு துறை சார்பில் தீ பாதுகாப்பு வாரத்தையொட்டி, சமையல் செய்து முடித்த பின்பு காஸ் அடுப்பு அணைத்து வைக்க வேண்டும், அடுப்பின் அருகில் எளிதில் தீப்பற்றி எரியும் பொருட்களை வைக்ககூடாது உள்ளிட்ட 18 வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளுக்கடை சந்திப்பு, திருக்கோவிலூர் சாலை, கடைவீதி, பஸ் நிறுத்த பகுதியில் தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர். தீயணைப்பு வீரர் பொன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
17-Apr-2025