அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் உள்ள 15 அரசு பள்ளிகளில் சரஸ்வதி கல்விக் குழுமம் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, 'தினமலர் - பட்டம்' இதழை மாணவர்களுக்கு வழங்கி, நாளிதழின் முக்கியத்துவம் பற்றி பேசினார். தொடர்ந்து, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை தாங்கி, மாணவிகளுக்கு 'தினமலர் - பட்டம்' இதழை வழங்கினார். தொடர்ந்து மாணவிகளுக்கு பட்டம் இதழை வழங்கிய ஆசிரியர்கள், பட்டம் இதழை பயில்வதால் ஏற்படும் அறிவுத்திறன், அரசு போட்டி தேர்வை சுலபமாக எதிர்கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.நிகழ்ச்சியில், சரஸ்வதி கல்விக்குழுமம் தாளாளர் ராஜசேகரன், செயலாளர் சிதம்பரநாதன் பங்கேற்றனர்.வழுதெரட்டி ஊராட்சி நடுநிலை பள்ளியில் சரஸ்வதி கல்விக்குழுமம் பொருளாளர் சிதம்பரநாதன் தலைமை தாங்கி, 'தினமலர் - பட்டம்' இதழை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் கதிர்வேல் உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.