மேலும் செய்திகள்
விழுப்புரம் பள்ளி மாணவர் சிலம்பாட்டத்தில் சாதனை
1 minutes ago
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
1 minutes ago
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் வரும் 16ம் தேதி மாவட்ட சீனியர் ஆண்கள் அணிக்கான தேர்வு நடக்கிறது. விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ரமணன் அறிக்கை : விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்களுக்கான மாவட்ட சீனியர் அணி தேர்வு செய்யப்படவுள்ளது. இந்த தேர்வு வரும் 16ம் தேதி காலை 9:௦௦ மணிக்கு, விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரியில் நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க கடந்த 1985ம் ஆண்டு செப்., 1ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். இந்த தேர்வில் பங்கேற்க வரும் அனைவரும் தங்களின் பிறப்பு சான்றிதழ், ஆதார் நகலை சமர்பிக்க வேண்டும். இதுபற்றி மேலும் விபரம் பெற விரும்புவோர், ரவிக்குமார் மொபைல் 8098899665, முரளி மொபைல் 9843801076 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 minutes ago
1 minutes ago