உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம்

வானுார்: ஆத்மா திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனைக் குழு கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் வரவேற்று, வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது. பள்ளி மாணவர்களை இயற்கை பண்ணையம் சார்ந்த கண்டுநர் சுற்றுலா அழைத்துச் செல்வது. பண்ணைப்பள்ளி நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். வானுார் வட்டார ஆத்மா திட்ட தலைவர் குப்பன் சிறப்புரையாற்றினார். தோட்டக்கலை உதவி இயக்குநர் கீதா தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் ரேவதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை