உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்ட அளவிலான கராத்தே போட்டி திண்டிவனம் மாணவர்கள் சாதனை

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி திண்டிவனம் மாணவர்கள் சாதனை

திண்டிவனம்: மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் திண்டிவனத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.விழுப்புரத்தில் உள்ள அண்ணா உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான 4-வது காரத்தே போட்டி, விழுப்புரம் மாவட்ட கராத்தே சங்கத்தால் நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்திலிருந்து300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திண்டிவனம் ஹிக்வானா ஷிடோரியு கராத்தே பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 9 -தங்கப்பதக்கம், 5- வெள்ளிப்பதக்கம், 6 -வெண்கலப்பக்கம் வென்று சாதனைப் படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சென்சாய் சூரியபிரகாஷ்,கார்த்திக், பழனி, ராஜேஷ்குமார் ஆகியோர் பயிற்சியளித்தனர். பதக்கம் பெற்ற மாணவர்களை ஹிக்வானா ஷிடோரியு கராத்தே பள்ளி நிறுவனர் ஹான்ஷிகிருஷ்ணமூர்த்தி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை