| ADDED : ஜன 13, 2024 03:41 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் மகிமைதாஸ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் தேவநேசன், செல்வமணி, முகமது மீரான், தாஸ், ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். தேவ சார்லஸ் வரவேற்றார்.அரசாணை எண்.243ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்பாட்டம் நடந்தது.நிர்வாகிகள் சண்முகசாமி, நடராஜன் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். தாலுகாவில் உள்ள டிட்டோ ஜாக் அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர் . முடிவில் இளமாறன் நன்றி கூறினார். வானுார்
திருச்சிற்றம்பலம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வானுார் டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமார், சந்தியா, தனுஷ்கோடி, குமார், அந்தோணிசாமி, கருணாநிதி, முத்துக்குமரன், ஜெய இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.