தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை துவக்கம்
விழுப்புரம்: மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனையை கலெக்டர் ேஷக்அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்தார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தொகுப்பு தயாரிக்கப்பட்டது. இதில், மளிகைப் பொருட்கள் மற்றும் திண்பண்டங்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு பைகள் தயார் செய்யப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், தீபாவளி சிறப்பு தொகுப்பு விற்பனை துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் ேஷக்அப்துல் ரஹ்மான கலந்து கொண்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.