உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் வரவேற்றார். பொருளாளர் ஜனகராஜ், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். மாநில விவசாய தொழிலாளரணி துணைச் செயலாளர் சிவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், நகர செயலாளர் சக்கரை, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் சித்திக்அலி, பேரூராட்சி செயலாளர் ஜீவா உட்பட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டிற்கு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் இளைஞரணி நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்