| ADDED : பிப் 23, 2024 10:21 PM
செஞ்சி, : விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் 27ம் தேதி செஞ்சியில் நடக்கிறது.மாவட்ட செயலாளர் மஸ்தான் அறிக்கை: விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் வரும் 27ம் தேதி மாலை 4:00 மணிக்கு மாவட்ட அவைத் தலைவர் சேகர் தலைமையில் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், மார்ச் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது. சேலம் இளைஞரணி 2வது மாநில மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்துவது. லோக்சபா தேர்தல் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.மாநில, மாவட்ட, நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு, உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.