தீ விபத்தில் பாதித்தவருக்கு தே.மு.தி.க., உதவி வழங்கல்
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பத்திற்கு தே.மு.தி.க.,வினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராமத்தை சேர்ந்த இருளர் குடும்பத்தைச் சேர்ந்த சுதாகர் மனைவி வெள்ளச்சி, 36; என்பவரது வீடு நேற்று முன்தினம் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்து. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் வெங்கடேசன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி பள்ளி சீருடை வேட்டி சேலை மளிகை வழங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் சூடாமணி, செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், பிரதிநிதிகள் நாராயணன், ஜெயக்குமார், விவசாய அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், கிளைச் செயலாளர் அல்லிமுத்து, மகளிர் அணி லட்சுமி, ரேவதி, செல்வி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.