உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் தி.மு.க., மாணவரணி பொதுக்கூட்டம்

திண்டிவனத்தில் தி.மு.க., மாணவரணி பொதுக்கூட்டம்

திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த தி.மு.க., மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.விழுப்புரம் மாவட்ட தி.மு.க., மாணவரணி சார்பில் திண்டிவனம் காந்தி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன் வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், வேதாஉதயசூரியன், முன்னாள் எம்.எல்.ஏ.,மாசிலாமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன், சீத்தாபதிசொக்கலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் சேகர், பொருளாளர் ரமணன், மாவட்ட துணை செயாளர் ரவிக்குமார், நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், தயாளன், துணை சேர்மன்கள் பழனி, ராஜாராம், பொதுக்குழு உறுப்பினர் கதிரசேன், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, வழக்கறிஞர் அசோகன்,முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, நகர துணை செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நகர மாணவரணி அமைப்பாளர் அஜய் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ