உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., வெற்றி தான் முக்கியம் முன்னாள் சேர்மன் திட்டவட்டம்

தி.மு.க., வெற்றி தான் முக்கியம் முன்னாள் சேர்மன் திட்டவட்டம்

விழுப்புரம்,:மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில், முதல்வர் ஸ்டாலினுக்கு இணையாக வேறு தலைவரை கூற முடியாது முன்னாள் சேர்மன் ஜனகராஜ் தெரிவித்தார். விழுப்புரம் நகராட்சி திடலில், ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்புக்குழு உறுப்பினர் ஜனகராஜ் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பு குழு தலைவர் இளங்கோவன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய முன்னாள் நகர்மன்ற சேர்மன் ஜனகராஜ் பேசியதாவது: விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இந்த இடம் நம்ம ஆட்சியில் தான் ஒதுக்கப்பட்டது. தி.மு.க., பொதுக்கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருக்கின்றனர். நம்மை பொறுத்தவரை, விழுப்புரம், வானுார் ஆகிய இரு தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி தான் முக்கியம். மற்ற எதைப்பற்றியும் சிந்திக்கக் கூடாது. தமிழக மக்கள் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அயராது செயலாற்றி வருகிறார். மக்களை நேரடியாக சந்திக்கக்கூடிய தலைவராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !