மேலும் செய்திகள்
தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்
03-Nov-2025
திண்டிவனம்: 'தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், நிச்சயம் 200 தொகுதிகளில் தி.மு.க.,வெற்றி பெறும்' என திண்டிவனத்தில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மஸ்தான் பேசினார். திண்டிவனம் சட்டசபை தொகுதியின், ஓட்டுச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏெஜன்ட் பங்கேற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர செயலாளர் கபிலன் வரவேற்றார். நகர மன்ற தலைவர் நிர்மலா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, மாவட்ட பிரதிநிதி முருகன், சின்னதுரை முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேசுகையில், 'தமிழகத்தில் யார் முதல்வராக வரவேண்டும் என்று நடத்திய சர்வேயில், 79.9 சதவீத பொது மக்கள் ஸ்டாலின் பெயரை கூறியுள்ளனர். மக்கள் தி.மு.க.,விற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நியாயமாக நடக்க கூடாது என மோடி நினைக்கிறார். தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,ஆட்சிக்கு வருவது உறுதி. 234 தொகுதிகளில், நிச்சயம் 200 தொகுதிகளில் தி.மு.க.,வெற்றி பெறும்' என்றார். கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., சீத்தாபதி சொக்கலிங்கம், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, நகர பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், வழக்கறிஞர்கள் அசோகன், கோபிநாத், நகர துணைச் செயலாளர் கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
03-Nov-2025