உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொங்கல் பரிசுத் தொகை எங்களுக்கு இல்லையா? தி.மு.க.,வில் அணி நிர்வாகிகள் கடும் அதிருப்தி

பொங்கல் பரிசுத் தொகை எங்களுக்கு இல்லையா? தி.மு.க.,வில் அணி நிர்வாகிகள் கடும் அதிருப்தி

பொங்கல், தீபாவளி பண்டிகைக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட செயலாளர், நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், கிளைச் செயலாளர், பூத் கமிட்டிக்கு தி.மு.க., தலைமை பணம் வழங்குவது வழக்கம்.செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்த போது, மாநிலம் முழுதும் கட்சி நிர்வாகிகளுக்கு பணம் வழங்கப்பட்டது. தற்போது செந்தில்பாலாஜி சிறையில் உள்ளதால், கடந்த தீபாவளி பண்டிகையின் போது, கட்சி தலைமையே, மாவட்ட செயலாளர் மூலம், நிர்வாகிகளுக்கு பணம் பட்டுவாடா செய்தது.தற்போது பொங்கல் பண்டிகைக்காக மாநிலம் முழுதும் கடந்த 2 நாட்களுக்கு முன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் நிர்வாகிகளுக்கு நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய். செயற்குழு உறுப்பினர்களுக்கு 25 ஆயிரம், மாவட்ட பிரதிநிதிகளுக்கு 10 ஆயிரம், நகரத்தில் வார்டுகளுக்கு 3,000, பூத் கமிட்டிக்கு 5,000, ஒன்றியங்களில் கிளைக்கு 2,000 ரூபாய் என மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் மூலம் வழங்கப்பட்டது.இதில் கட்சியில் உள்ள சார்பு அணிகளான இளைஞர் அணி, விவசாய அணி, மகளிர் அணி உள்ளிட்ட 20 மேற்பட்ட அணி நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை ஒரு ரூபாய் கூட வழங்காமல் புறக்கணித்துள்ளது. இது, அணி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அணி நிர்வாகிகள் ஒவ்வொரு தேர்தலின் போது, வெற்றிக்கு பாடுபட்டு வரும் நிலையில் ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது எந்த விதத்தில் நியாயம் என அணி நிர்வாகிகள் தரப்பில் புலம்பி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அங்குள்ள பொறுப்பு அமைச்சர் வேலு, மாவட்ட செயலாளர்கள் மூலம் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு அணி அமைப்பாளர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாயும், துணை அமைப்பாளர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கியுள்ளார்.ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் வழக்கம் போல பொங்கல் பண்டிகைக்கு அணி நிர்வாகிகளுக்கு ரொக்கம் வழங்காமல் இருப்பது, நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில், பொங்கல் பரிசு பணம் வழங்காதது கடும் விளைவை ஏற்படுத்தும் என அணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை