உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா

திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா

விழுப்புரம்; திரவுபதி அம்மன் கோவிலில் 150ம் ஆண்டு திருவிழாவை யொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.விழுப்புரம் அருகே சேர்ந்தனுார் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 150ம் ஆண்டு திருவிழா கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை நாளில் துவங்கியது. அன்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெற்றது.இதை தொடர்ந்து, சுவாமி வாகனத்தில் கருட பகவான், கிருஷ்ணர், திரவுபதி அம்மன், பொற்கலை, பூரணி, மாரியம்மன், காத்தவராயன், போத்தராசன் ஆகிய அலங்காரங்களில் ஜோடிக்கப்பட்டு வீதிகளில் உலாவாக வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை