போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கோட்டக்குப்பம் காவல் நிலையம் சார்பில் நடந்த ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாணவ, மாணவியர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தின்போது, போதையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை எந்தியபடி முக்கிய வீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர்.