உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைப்பொருள் விற்பனை தடுக்கப்படும்: விழுப்புரம் எஸ்.பி., சரவணன் உறுதி

போதைப்பொருள் விற்பனை தடுக்கப்படும்: விழுப்புரம் எஸ்.பி., சரவணன் உறுதி

விழுப்புரம்; மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை கட்டுப்படுத்தப்படும் என எஸ்.பி., சரவணன் கூறியுள்ளார்.விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த தீபக்சிவாச் மாற்றப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட எஸ்.பி., சரவணன் நேற்று காலை 10.00 மணிக்கு பொறுப்பேற்றார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், அதன் பொறுப்பு அதிகாரி மூலம், குறிப்பிட்ட நேரத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்படும். எஸ்.பி.,யை சந்தித்து பொது மக்கள் தங்கள் புகார், பிரச்னைகளை தெரிவிக்கலாம்.மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.எஸ்.பி., சரவணன், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர், வேளாண் பொறியியல் படிப்பு முடித்து, கடந்த 2001ம் ஆண்டு டி.எஸ்.பி.,யாக காவல் பணியை தொடங்கினார். தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி.,யாக தர்மபுரியில் பணியாற்றியவர், 2011ல் எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றதோடு, 2012ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று சென்னை, கடலுார், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பி.,யாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ