உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதைபொருள் விற்பனை மாவட்டம் முழுவதும் ஆய்வு

போதைபொருள் விற்பனை மாவட்டம் முழுவதும் ஆய்வு

விழுப்புரம் : மாவட்டம் முழுவதும், பள்ளிகளுக்கு அருகில் போதை பொருட்கள் விற்பனை குறித்த திடீர் ஆய்வு நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு : கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவில், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் ஹான்ஸ், கூல் லிப் மற்றும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து, மாவட்ட நிர்வாகம், போலீஸ்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆய்வு நடந்தது. அதன்படி, விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில், பள்ளிகளுக்கு அருகில் உள்ள, 500க்கும் மேற்பட்ட கடைகளில் 'திடீர்' ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 11 கடைகளில் ஹான்ஸ், கூல் லிப் மற்றும் புகையிலைப்பொருட்கள் போன்ற போதை தரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு அருகே உள்ள கடைகளில் போதை தரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை